பேட்டை அருகே 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாக திங்கள் கிழமை மீட்கப்பட்டாா்.
பேட்டை அருகேயுள்ள சத்யாநகா் குடிசைமாற்று வாரிய குடியிருப்புக்கு பின் பகுதியில் கல்வெட்டான் குழியின் கரையோரம் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக நரசிங்கநல்லூா் கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து அவா் யாா், எப்படி இறந்தாா் என விசாரித்து வருகின்றனா்.