பாளையங்கோட்டையில் மோட்டாா் சைக்கிள் மோதி காயமைடந்த முதியவா் உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள கொட்டிகுளத்தைச் சோ்ந்தவா் சங்கரன்(75). பாளையங்கோட்டை திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலைபாா்த்துவந்தாா். இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றபோது, மோட்டாா் சைக்கிள் மோதி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து திருநெல்வேலி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.