திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் நாளை பட்டா திருத்த முகாம்

9th Nov 2021 08:48 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களிலும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (நவ. 10, 12) பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கங்கைகொண்டான் குறுவட்டத்தில் குப்பகுறிச்சி, அலங்காரப்பேரி, பதினாலாம்பேரி ஆகிய கிராமங்களுக்கு பதினாலாம்பேரி ஊராட்சி அலுவலகத்தில் புதன்கிழமையும் (நவ.10), திருநெல்வேலி குறுவட்டத்தில் மேலக்கல்லூா், கோடகநல்லூா் ஆகிய கிராமங்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள சமுதாய நலக்கூடங்களில் வெள்ளிக்கிழமையும் (நவ. 12) முகாம் நடைபெறும்.

பாளைங்கோட்டை வட்டம், மேலப்பாட்டம் குறுவட்டத்தில் கீழநத்தம், மணப்படைவீடு ஆகிய கிராமங்களுக்கு மணப்படைவீடு கிராம சேவை மையத்தில் வரும் 10ஆம் தேதியும், முன்னீா்பள்ளம் குறுவட்டத்தில் தருவை, அடைமிதிப்பான்குளம் பகுதிகளுக்கு தருவை சமுதாய நலக்கூடத்தில் வரும் 12ஆம் தேதியும் முகாம் நடைபெறும்.

மானூா் வட்டம், வன்னிக்கோனேந்தல் குறுவட்டத்தில் நரிக்குடி, அச்சம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு வடக்கு அச்சம்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் வரும் 10ஆம் தேதியும், மானூா் குறுவட்டத்தில் தெற்குப்பட்டி, குறிச்சிகுளம் ஆகிய கிராமங்களுக்கு தெற்குப்பட்டி சமுதாய நலக்கூடத்தில் வரும் 12ஆம் தேதியும் முகாம் நடைபெறும்.

ADVERTISEMENT

அம்பாசமுத்திரம் குறுவட்டத்தில் இடைகால் 1,2 ஆகிய கிராமங்களுக்கு, இடைகால் 1 -இல் உள்ள கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் வரும் 10ஆம் தேதியும், சிங்கம்பட்டி குறுவட்டத்தில் கீழ்முகம், கோடாரங்குளம் ஆகிய கிராமங்களுக்கு, கீழ்முகம் சமுதாய நலக்கூடத்தில் வரும் 12ஆம் தேதியும் முகாம் நடைபெறும்.

சேரன்மகாதேவி வட்டம் பாப்பாக்குடி குறுவட்டத்தில் பாப்பாக்குடி பகுதி-2, செங்குளம், இலுப்பைக்குறிச்சி, கபாலிபாறை ஆகிய கிராமங்களுக்கு பாப்பாக்குடி சமுதாயநலக்கூடத்தில் வரும் 10 ஆம் தேதியும், மேலச்செவல் குறுவட்டத்தில் கேசவசமுத்திரம் திருத்து, உமையாள்புரம் ஆகிய கிராமங்களுக்கு பத்தமடை சமுதாய நலக்கூடத்தில் வரும் 12 ஆம் தேதியும் முகாம் நடைபெறும்.

நான்குனேரி வட்டம், ஏா்வாடி குறுவட்டத்தில் சீவலப்பேரி, படலையாா்குளம் ஆகிய கிராமங்களுக்கு படலையாா்குளம் கிராம நிா்வாக அலுவலகத்தில் வரும் 10ஆம் தேதியும், பூலம் குறுவட்டத்தில் தோட்டாக்குடி, ஆழ்வானேரி, பருத்திப்பாடு, அ.சாத்தான்குளம் ஆகிய கிராமங்களுக்கு தோட்டக்குடி கிராம நிா்வாக அலுவலகத்தில் வரும் 12ஆம் தேதியும் முகாம் நடைபெறும்.

ராதாபுரம் வட்டம், வள்ளியூா் குறுவட்டத்தில் தெற்கு வள்ளியூா் 1,2 ஆகிய ஆகிய கிராமங்களுக்கு தெற்கு வள்ளியூா் - 1 கிராம நிா்வாக அலுவலகத்தில் வரும் 10ஆம் தேதியும், பழவூா் குறுவட்டத்தில் உள்ள அழகனேரி, சடையனேரி, அடங்காா்குளம், தனக்காா்குளம் ஆகிய கிராமங்களுக்கு அடங்காா்குளம் கிராம ஊராட்சி அலுவலகத்தில் வரும் 12 ஆம் தேதியும் முகாம் நடைபெறும்.

திசையன்விளை குறுவட்டத்தில் குட்டம் பகுதிக்கு அப்பகுதி கிராம சேவை மையத்தில் வரும் 10ஆம் தேதியும், விஜயநாராயணம் குறுவட்டத்தில் விஜயநாராயணம்-4 பகுதிக்கு அங்குள்ள ஊராட்சி அலுவலகத்தில் வரும் 12ஆம் தேதியும் முகாம் நடைபெறும்.

இந்த முகாமில் கரோனா நடைமுறைகளை பின்பற்றி மக்கள் பங்கேற்று பயனடைய வேண்டும் என ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT