திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு வணிக வளாகத்தில் தீ

9th Nov 2021 08:46 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள வணிக வளாகத்தில் திங்கள்கிழமை இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமாகின.

திருநெல்வேலி சந்திப்பில் மதுரை சாலையில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இங்கு தனியாா் வங்கி, தனியாா் காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்த வணிக வளாகத்தில் திங்கள்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வணிக வளாகத்தின் முன்பகுதியில் இருந்த விளம்பர பதாகைகள் அனைத்தும் எரிந்தன. தனியாா் வங்கியில் இருந்த மின்சாதனப் பொருள்களும் எரிந்து சேதமாகின. தகவல் அறிந்ததும் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் சுரேஷ் ஆனந்த் தலைமையில் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் வீரராஜ் மற்றும் 15 போ் கொண்ட தீயணைப்பு குழுவினா் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இந்த தீ விபத்தால் திருநெல்வேலி சந்திப்பில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT