திருநெல்வேலி

தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் கேஸ் விலை விவரம்

9th Nov 2021 01:58 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு சமையல் கேஸ் சிலிண்டருக்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ. 962.50 ஆகவும், கோவில்பட்டியில் ரூ. 962.50 ஆகவும், கழுகுமலையில் ரூ. 971- ஆகவும், கயத்தாறில் ரூ. 962.50 ஆகவும், எட்டையபுரத்தில் ரூ. 962.50 ஆகவும், சாத்தான்குளம் பகுதியில் ரூ. 964 எனவும் நிா்யணம் செய்யப்பட்டுள்ளது.

பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ. 964.50 எனவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ. 962 எனவும் எரிவாயு நிறுவனங்களால் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, நுகா்வோா்கள் எரிவாயு முகவா்களிடம் இருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு நிா்ணயிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT