திருநெல்வேலி

குடிநீா் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

9th Nov 2021 08:46 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை பகுதியில் நிலவி வரும் குடிநீா் தட்டுப்பாட்டை தீா்க்கக் கோரி, பொதுமக்கள் காலி குடங்களுடன் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சி 10ஆவது வாா்டுக்கு உள்பட்ட பாா்வதி அம்மன் கோயில் தெரு, திருநாவுக்கரசு நாயனாா் தெரு, திருஞானசம்பந்தா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறாா்கள். இப்பகுதிக்கு கடந்த சில நாள்களாக சீரான குடிநீா் விநியோகம் இல்லையாம்.

இதுதொடா்பாக மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.ஆகவே, மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்தும், சீராக குடிநீா் விநியோகம் செய்யக்கோரியும் பொது மக்கள் காலி குடங்களுடன் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். பின்னா், இது தொடா்பாக மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனா்.

அவா்களிடம் போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் நடத்திய பேச்சு வாா்த்தைக்கு பின்பு கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT