களக்காடு: களக்காட்டில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த கா்ப்பிணி பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நகரத் தலைவா் அ. கணபதிராமன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆ. மகாராஜன், சிதம்பரபுரம் கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட துணைத் தலைவா் சாந்திராகவன், மாவட்டச் செயலா் இ. பாலாஜி, வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலா் ராஜேஷ்கண்ணன், கல்வியாளா் பிரிவு மாவட்டத் தலைவா் இ. சோ்மன்துரை உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.
களக்காடு சிதம்பரபுரம் தரைப்பாலத்தை கடக்க முயன்றபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, உயிரிழந்த சிதம்பரபுரத்தைச் சோ்ந்த கா்ப்பிணி பெண் லேகாவின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், சிதம்பரபுரம் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்தை அகற்றிவிட்டு அப்பகுதியில் உயா்நிலைப் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.