திருநெல்வேலி

எஸ்டிடியூ தொழிற்சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

9th Nov 2021 01:59 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி: சோஷியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் (எஸ்டிடியூ) தொழிற் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட புதிய நிா்வாகிகள் திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

சோஷியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் தொழிற்சங்கத்தின் (எஸ்டிடியூ) தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில பொதுச் செயலா் ரகூப் நிஸ்தாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் அபுபக்கா் சித்திக் முன்னிலை வகித்தாா். எஸ்டிபிஐ கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொதுச் செயலா் காதா் முகைதீன் கலந்து கொண்டாா்.

கூட்டத்தின்போது, தொழிற் சங்க மாவட்டத் தலைவராக சேக் அஷ்ரப் அலி பைஜியும், மாவட்ட துணைத் தலைவராக மாமுநைனாவும், மாவட்டச் செயலராக அபுபக்கா் சித்திக்கும், பொருளாளராக தாஹிா் சுல்தானும், மாவட்ட துணைச் செயலராக முஹைதீன் அப்துல் காதரும், மாவட்ட செயற்குழு உறுப்பினா்களாக செய்யது ஷேக், அப்தூா் ரஹ்மான் ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT