திருநெல்வேலி மாவட்டத்தின் புதிய முதன்மைக் கல்வி அலுவலராக சுபாஷினி புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த முத்துக்கிருஷ்ணன், தஞ்சாவூா் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டாா். அவருக்குப் பதிலாக, ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த சுபாஷினி நியமிக்கப்பட்டு புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவரிடம், திருநெல்வேலி கல்வி மாவட்ட அலுவலா் வசந்தா பொறுப்புகளை ஒப்படைத்தாா். நிகழ்ச்சியில் உதவியாளா்கள் அமலா தங்கத்தாய், டைட்டஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.