கடையநல்லூா்: கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திரிபுராவில் பள்ளி வாசல்கள், வீடுகள், கடைகள் மீது தாக்குதல் நடத்திய விஷ்வ இந்து பரிசத் அமைப்பை கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, தென்காசி மாவட்டத் தலைவா் அப்துல் ஸலாம் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் செய்யதுஅலி, மேலாண்மை குழு உறுப்பினா் அப்துல்நாசா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முஹம்மது பைசல் பேசினாா்.
இதில், மாவட்டச் செயலா் அப்துல் பாஷித், மாவட்ட துணைத்தலைவா் செய்யது மசூது, மாவட்ட துணைச் செயலா்கள் அஹமத், ஹாஜா முகைதீன், பீா் முஹம்மது, செய்யது அன்வா்சாதிக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.