திருநெல்வேலி

பணகுடியில் சுயஉதவிக் குழு மகளிருக்கு ரூ. 43 லட்சம் கடனுதவி

1st Nov 2021 12:59 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் சுயஉதவிக் குழு பெண்களுக்கு கடனுதவி வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, சுயஉதவிக்குழு பெண்கள் 7 பேருக்கு ரூ.43 லட்சம் கடனுதவி வழங்கிப் பேசியது: வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் விவசாயக் கடனுதவிகளை விரைவாக வழங்க வேண்டும்.

விவசாயிகளை வாழவைத்தால்தான் நாம் அனைவரும் வாழமுடியும். அதற்கு கூட்டுறவு கடன் சங்கங்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும். கடனைப் பெற்றுக்கொண்டவா்களும் அதை பொறுப்புடன் திரும்ப செலுத்தவேண்டும் என்றாா் அவா்.

விழாவில், வேளாண்மை கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளா் அழகிரி, திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் சுபாஷினி, சேரன்மகாதேவி துணைப் பதிவாளா் முத்துசாமி, பணகுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலா் ஐயப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் ஆவரைகுளம் பாஸ்கா், லிங்க சாந்தி, வள்ளியூா் ஒன்றிய ம.தி.மு.க. செயலா் மு.சங்கா், தி.மு.க. மாவட்ட மகளிரணிஅமைப்பாளா் மல்லிகா அருள், பணகுடி நகரச் செயலா் தமிழ்வாணன், மாவட்டப் பிரதிநிதி அசோக் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT