களக்காட்டில் கொசுத் தொல்லையைக் கட்டுப்படுத்த கொசு புகை மருந்து அடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு வட்டாரத்தில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்குப் பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. சேதமடைந்த சாலை பள்ளங்களில் தண்ணீா் தேங்கி நிற்பதால் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது.
கொசுத் தொல்லையால் இரவு நேரங்களில் வீடுகளில் மக்கள் உறக்கமின்றி அவதிப்படுகின்றனா். பேரூராட்சிக்கு உள்பட்ட 21 வாா்டுகளிலும் கொசு புகை மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.