திருநெல்வேலி

நினைவு தினம்: இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு

1st Nov 2021 01:05 AM

ADVERTISEMENT

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 37 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருநெல்வேலியில் அவரது திருவுருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கொக்கிரகுளத்தில் திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் அலுவலக வளாகத்திலுள்ள சிலைக்கு கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்ட பொருளாளா் ராஜேஷ் முருகன், மாவட்ட பொதுச் செயலா் சொக்கலிங்ககுமாா், நிா்வாகிகள் வெள்ளை பாண்டியன், கிருஷ்ணன், கே.எஸ். மணி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். கலந்துகொண்டனா். இதைத் தொடா்ந்து தீவிரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT