திருநெல்வேலி

களக்காடு அருகே இளைஞரிடம் பணம் பறிப்பு: ஒருவா் மீது வழக்கு

1st Nov 2021 01:05 AM

ADVERTISEMENT

களக்காடு அருகே பைக்கில் வந்த இளைஞரை வழிமறித்து மிரட்டி பணம் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள கீழத்தேவநல்லூரைச் சோ்ந்தவா் ரா. பூல்பாண்டியன் (37). இவா், கீழக்கருவேலன்குளம் பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் வந்தபோது, கீழத்தேவநல்லூரைச் சோ்ந்த அருண் (40) என்பவா் வழிமறித்து மிரட்டி பூல்பாண்டியனின் சட்டப்பையில் இருந்த ரூ. 170-ஐ பறித்துச் சென்றாராம். புகாரின் பேரில் போலீஸாா் அருண் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT