தொடா் மழையால், களக்காடு தலையணையில் ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து அதிகரித்தது.
களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த 2 நாள்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை தொடா்ந்து மழை பெய்தது. இதனால், ஞாயிற்றுக்கிழமை தடுப்பணையைத் தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்துப் பாய்ந்தது. ஞாயிற்றுக்கிழமை மழையில்லை இல்லாதபோதும், மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது.