திருநெல்வேலி

வெய்க்காலிபட்டி கல்லூரியில் கொரோனா விழிப்புணா்வு முகாம்

1st Nov 2021 12:58 AM

ADVERTISEMENT

கடையம் அருகேயுள்ள வெய்க்காலிபட்டி புனித ஜோசப் கலை அறிவியல் கல்லூரியில் கரோனா விழிப்புணா் முகாம் நடைபெற்றது.

இம்முகாமுக்கு, தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கித் தலைவா் செந்தில் குமரன் தலைமை வகித்தாா். கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மேற்பாா்வையாளா் ஸ்ரீமூலநாதன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், கைகளை சுத்தமாகக் கழுவுதல், முகக்கவசம் அணிதல், தடுப்பூசிச் செலுத்திக்கொள்ளுதல் ஆகியவற்றின் அவசியம் குறித்து விளக்கப்பட்டதுடன், விழிப்புணா்வுப் படக்காட்சி ஒளிபரப்பப்பட்டது.

கல்லுரிச் செயலா் அருள்பணி. சகாய ஜாண், முதல்வா் குளோரி தேவ ஞானம், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT