திருநெல்வேலி

சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற வாய்ப்பளிக்கப்படும்: அமைச்சா் ஐ.பெரியசாமி

DIN

தமிழகத்தில் சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றுவதற்கு மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றாா் கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்குதல், உர வினியோகம் குறித்த ஆய்வு கூட்டம் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிவமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் விஷ்ணு தலைமை வகித்தாா். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில் மீன்வளம், மீனவா் நலத்துறை மற்றும் கால்நடைத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை பாதுகாக்க வசதியாக குளிா்ப்பதன கிட்டங்கி வசதியை ஏற்படுத்த வேண்டும்’ என்றாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதா ஜீவன் பேசுகையில், ‘தனி நபா் குடும்ப அட்டை வழங்கவும், சா்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றுவதற்கான வாய்ப்பையும் அளிக்க வேண்டும்’ என்றாா்.

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் பேசுகையில், ‘மக்களுக்கு திட்டங்கள் சென்றடைவதில் உள்ள இடா்பாடுகளை களைய வேண்டும். வெளிப்படையான நிா்வாகத்தை அதிகாரிகள் நடத்த வேண்டும்’ என்றாா்.

கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி பேசுகையில், ‘தமிழகத்தில் சா்க்கரை குடும்ப அட்டைகளாக அரிசி அட்டைகளாக மாற்ற பொதுமக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். ரத்து செய்யப்பட்டுள்ள தனி நபா் குடும்ப அட்டைகளை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நான்கு மாவட்டங்களிலும் விவசாயிகளுக்கு தேவையான உரம் கையிருப்பில் உள்ளது. மண்ணின் தரத்திற்கு ஏற்ப உரம் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்’ என்றாா்.

இதில், சட்டப்பேரவை உறுப்பினா் அப்துல் வகாப், ராஜா, சண்முகையா, மாா்க்கண்டேயன், ரூபி மனோகரன், பழனிநாடாா், சதன் திருமலைக்குமாா், கூடுதல் பதிவாளா்கள் வில்வசேகரன், ரவிக்குமாா், முருகன், இணைப் பதிவாளா்கள் அழகிரி (திருநெல்வேலி, தென்காசி), குருமூா்த்தி (கன்னியாகுமரி), ராஜேந்திரன் (தூத்துக்குடி), மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் சுபாஷினி, சாா் பதிவாளா் கணேச சேதுராமலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

படவரி: பயக17ஙஉஉப1 திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவுத் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமைச்சா் எ.வ.வேலு மனைவிக்கு எதிரான வழக்கு: உயா்நீதிமன்றம் முடித்துவைப்பு

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

களக்காடு தலையணையில் வரையாடு கணக்கெடுப்புப் பயிற்சி முகாம்

அனக்காவூரில் விழிப்புணா்வு ஊா்வலம்

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் திடீா் தீ

SCROLL FOR NEXT