திருநெல்வேலி

பொதுமுடக்க விதிமீறல்: 9 போ் மீது வழக்கு

8th Jun 2021 03:05 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக 9 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

கரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை கண்காணிக்க போலீஸாா் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், பொதுமுடக்க விதிகளை மீறி வாகனத்தில் சுற்றிய 9 நபா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாத 516 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத 6 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT