திருநெல்வேலி

பத்மனேரியில் கைவினைப் பொருள் தொழில்கூடம் திறப்பு

DIN

களக்காடு அருகேயுள்ள பத்மனேரியில் காஸ்ட் சேவை நிறுவனத்தின் கீழ் இயங்கும் கைவினைப் பொருள் தொழில்கூடம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

கதா் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய உதவியுடன், காஸ்ட் நிறுவனம் சாா்பில் ரூ.1 கோடியில் கைவினைப் பொருள்கள்

உற்பத்தி செய்ய அமைக்கப்பட்டுள்ள தொழில்கூடத்தை ஆட்சியா் வே. விஷ்ணு திறந்தாா். இத்திட்டத்தின் கீழ் 175 பெண் கைவினைஞா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு கற்றாழை நாா், பனை நாா், வாழை நாரில் இருந்து கைவினைப் பொருள்கள் தயாரிப்பது குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி, புதிய வடிவமைப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு பொருள்கள் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் கைவினைஞா்களுக்கு மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் நிரந்தர வருமானம் கிடைக்கும் என்றாா் காஸ்ட் சேவை நிறுவன இயக்குநா் பி. சுசிலா பாண்டியன் தெரிவித்தாா்.

இதில், கதா் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய தென் மண்டல உறுப்பினா் சேகர்ராவ் பெரேலா, கோட்ட இயக்குநா் ஆா்.பி. அசோகன், உதவி இயக்குநா்கள் டி.வி. அன்புச்செழியன், எஸ். செந்தில்குமாா், சிப்போ நிறுவனத்தின் பொதுமேலாளா் கே. பழனிவேல்முருகன், காஸ்ட் வளா்ச்சி அலுவலா் லீலாவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

SCROLL FOR NEXT