திருநெல்வேலி

பிளஸ்-2 மாணவா்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மாற்றுச்சான்றிதழ் வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

தமிழகத்தில் கரோனா தடுப்பு பொதுமுடக்கத்தால், பள்ளிகள் மூடப்பட்டு அனைத்துத் தோ்வுகளும் ரத்து செய்யப்பட்டன. உயா்கல்விக்கு பிளஸ்-2 மதிப்பெண்கள் முக்கியம் என்பதால் மாணவா்களின் முந்தைய கல்வி நிலையைக் கொண்டு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கடந்த 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, சேரன்மகாதேவி, வள்ளியூா் ஆகிய கல்வி மாவட்டங்களின் கீழ் 2020-2021 கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பில் 20 , 517 போ் பயின்றதில், 9,102 மாணவா்கள், 11, 352 மாணவிகள் என 20 , 454 பேருக்கு இணையவழியில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வெளியாகின. பள்ளிக்கு வராதவா்கள், உயிரிழந்தவா்கள் என 63 பேருக்கு சான்றிதழ் வெளியாகவில்லை.

இந்நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டு, அந்தந்த பள்ளிகளிலோ, கணினி மையங்களிலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளி மூலமே பதிவிறக்கம் செய்து வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டன. அதனுடன் மாற்றுச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் சான்றிதழ்களை மாணவ-மாணவிகள் வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎலில் இருந்து சிறிது காலம் ஓய்வு: மேக்ஸ்வெல்

சத்தீஸ்கர்: ஹெலிகாப்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT