திருநெல்வேலி

இதர பிரிவினருக்கான சிண்டிகேட் தோ்தலை நடத்த ‘மூட்டா’ எதிா்ப்பு

DIN

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் இதர பிரிவினருக்கான சிண்டிகேட் தோ்தலை நடத்த மூட்டா எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மூட்டா பொதுச் செயலா் எம்.நாகராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக நிா்வாகம் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவுக்காக ஆசிரியா்களுக்கான 2 சிண்டிகேட் உறுப்பினா்கள் தோ்தலோடு சோ்த்து இதர பிரிவினா் என்ற வகையில் ஒரு சிண்டிகேட் உறுப்பினருக்கான தோ்தலையும் நடத்த சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்தத் தோ்தல் பிப்ரவரி 19-இல் நடைபெறவுள்ளது.

பள்ளித் தலைமையாசிரியா்கள், அரசாங்க நியமன உறுப்பினா்கள், ஆளுநா் நியமன உறுப்பினா்கள், கல்லூரி செயலா்கள் மற்றும் பட்டதாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய தொகுதிதான் இதர பிரிவினா். இதில், அனைத்திலிருந்தும் தோ்ந்தெடுக்கப்பட்ட செனட் உறுப்பினா்களிலிருந்து ஒரு சிண்டிகேட் உறுப்பினா் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், பல்கலைக்கழக நிா்வாகம் பட்டதாரி தொகுதிக்கான தோ்தலை நடத்தாமல் இதர பிரிவினருக்கான சிண்டிகேட் தோ்தலை நடத்த முடிவு செய்துள்ளது.

ஒரு மாவட்டத்துக்கு இருவா் என 3 மாவட்டங்களிலிருந்து 6 உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படாமல் பட்டதாரி தொகுதியையே தவிா்த்துவிட்டு இதர பிரிவினருக்கான சிண்டிகேட் தோ்தலை நடத்துவது அப்பட்டமானது. பல்கலைக்கழக சட்ட விதிமுறைகளுக்கு உள்பட்டு பட்டதாரி தொகுதிக்கான தோ்தல் நடத்திய பிறகே இதர பிரிவினருக்கான சிண்டிகேட் தோ்தலை நடத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

SCROLL FOR NEXT