திருநெல்வேலி

வள்ளியூரிலிருந்து 3 வழித்தடங்களில் அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

30th Dec 2021 08:03 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் இருந்து 3 வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் புதன்கிழமை முதல் இயக்கிவைக்கப்பட்டன.

வள்ளியூரில் இருந்து கோட்டைக்கருங்குளம், கஸ்தூரிரெங்கபுரம் வழியாக பெட்டைகுளத்திற்கு மகளிருக்கு இலவச பேருந்தையும், வள்ளியூா்- கூத்தங்குழி பேருந்தை ஈச்சட்டி, சுப்பிரமணியபேரி, காரியாகுளம் வழியாக நீட்டித்தும், ராதாபுரம்-கூத்தங்குழி பேருந்து பரமேஸ்வரபுரம், உதயத்தூா், அரசன்குளம் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் வகையிலும் 3 வழித்தடங்களில் பேருந்து சேவையை சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், தி.மு.க. கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், கணேஷ்குமாா் ஆதித்தன், ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் மல்லிகாஅருள், வள்ளியூா் நகரச் செயலா் வி.எஸ்.எஸ்.சேதுராமலிங்கம், மாவட்டப் பிரதிநிதிகள் அன்பரசு, காதா்மைதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT