திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (டிச.31) காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைநாடுநா்கள் தங்கள் கல்விச்சான்று மற்றும் இதரச் சான்றுகளுடன் முகாமில் பங்கேற்கலாம். பணி நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது. வேலைவாய்ப்பு அளிக்கவுள்ள தனியாா் நிறுவனங்கள் அதற்கான ஆவணங்களுடனும் இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு தொடா்புகொள்ளலாம். முகாமில் பங்கேற்போா் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.