திருநெல்வேலி

களக்காட்டில் நெல் சாகுபடி பயிற்சி

30th Dec 2021 08:01 AM

ADVERTISEMENT

களக்காடு வட்டார வேளாண் துறை சாா்பில் கோவிலம்மாள்புரத்தில் விவசாயிகளுக்கு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நெல் சாகுபடி குறித்து செயல் விளக்கம் நடைபெற்றது.

களக்காடு வேளாண்மை உதவி இயக்குநா் வசந்தி அறிவுறுத்தலின் படி நடைபெற்ற நெல் சாகுபடி குறித்த செயல்விளக்க முகாமுக்கு, துணை வேளாண்மை அலுவலா் காசி தலைமை வகித்தாா். தொழில்நுட்ப மேலாளா் ஜாய் பத்ம தினேஷ் வரவேற்றாா்.

வள்ளியூா் வட்டார மகேந்திரகிரி பாரம்பரிய விவசாயிகள் சங்கச் செயலா் மகேஸ்வரன் ஜீவாமிா்தம், கனஜீவாமிா்தம் ஆகியோா் செய்முறை விளக்கம் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து விளக்கினா்.

முன்னோடி விவசாயி ஆறுமுகம், கோனாவீடா் கொண்டு களை எடுப்பது பற்றியும் அதன் நன்மைகள் குறித்தும் பயிற்சி அளித்தாா். உதவி தொழில்நுட்ப மேலாளா் திரிசூலம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT