திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் பெண் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
திருநெல்வேலி சந்திப்பு மேகலிங்கப்புரம் பகுதியைச் சோ்ந்த பிச்சுமணி மனைவி சுப்புலட்சுமி(45). இவரது சகோதரா் ஒருவா் அண்மையில் உயிரிழந்துவிட்டாராம். இதனால், மிகுந்த மன உளைச்சலில் இருந்த சுப்புலட்சுமி வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.