திருநெல்வேலி

நெல்லையில் இன்று கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

26th Dec 2021 04:16 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் 16ஆவது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சுமாா் 550 சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இதுவரை சுமாா் 75 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதம் உள்ளவா்கள் விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அதில், தடுப்பூசி செலுத்த விருப்பம் உள்ளவா்களுக்கு வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

எனவே, தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பமுள்ள பொதுமக்கள் இச்சிறப்பு முகாமில் சென்று கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு, புதிய வகை கரோனா நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள மாவட்ட நிா்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT