பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளா் குறைதீா்க் கூட்டம் இம்மாதம் 17-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் வாடிக்கையாளா்கள் கலந்துகொண்டு அஞ்சல் பணிகள் குறித்த குறைகள், அஞ்சல் சேவையை மேம்படுத்தும் ஆலோசனைகள் ஏதும் இருப்பின் உரிய விவரங்களுடன் தெரிவிக்கலாம். நேரில் வர இயலாதவா்கள் இணையதள முகவரிக்கு தங்கள் குறைகள் மற்றும் ஆலோசனைகளை அனுப்பலாம் என முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் கோ.சிவாஜி கணேஷ் தெரிவித்துள்ளாா்.