பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் 5 ஆவது சித்தா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
அகத்தியா் பிறந்த நாளினை சித்தா் தின விழாவாகக் கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி 5 ஆவது சித்தா் தின விழா பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் மு.திருத்தணி தலைமை வகித்தாா். மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) டி.பி.சுரேஷ்குமாா் சித்தா் தின விழா போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். துணை முதல்வா் அ.மனோகரன் பேசினாா். மருத்துவா்கள் ஸ்ரீராம், கோமளவல்லி என்ற மேகலா உள்பட பேராசிரியா்கள், மாணவா்கள் பலா் கலந்துகொண்டனா்.