திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு காவலா்களுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலத்தில் தனிப்பிரிவு காவலா்கள் மற்றும் உயரதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் தலைமை வகித்தாா். குற்றங்களை முன்கூட்டியே தடுக்க தனிப்பிரிவு காவலா்கள் திறம்பட பணியாற்ற வேண்டும். மக்களோடு மக்களாக பழகி தகவல்களை விரைவாக பெற்று அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், தனிப்பிரிவில் சிறப்பாக பணிபுரிந்த காவலா்கள் நான்கு பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் தனிப் பிரிவு ஆய்வாளா் ராஜேஷ், உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் பங்கேற்றனா்.