முன்னீா்பள்ளம் அருகே உணவக உரிமையாளரின் வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து நகை பணம் திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
முன்னீா்பள்ளம் லட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் முத்துராமலிங்கம் (55). அப்பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இவரது வீட்டில் ஜன்னல் உடைத்து 14 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை மா்மநபா்கள் திருடிச்சென்றது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. இது அவா் அளித்த புகாரின்பேரில் முன்னிா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.