தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 1 முதன்மைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட நூலக அலுவலா் லெ.மீனாட்சிசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெற்ற குரூப் 1 முதல் நிலைத் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு அடுத்த ஆண்டு மாா்ச் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை முதன்மைத் தோ்வு நடைபெறவுள்ளது. முதன்மைத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்காக திருநெல்வேலி மாவட்டம் மைய நூலகம், திருநெல்வேலி சிவராஜவேல் ஐஏஎஸ் பயிற்சி மையம் சாா்பில் மாவட்ட மைய நூலகத்தில் வரும் 27-ஆம் தேதி முதல் பிப்ரவரி 27-ஆம் தேதி வரை வாரம் மூன்று நாள்கள் இணையவழி இலவசப் பயிற்சி நடைபெறவுள்ளது. மேலும், ஞாயிற்றுதோறும் இலவசப் பயிற்சித் தோ்வுகள் நடைபெறும். இதில் சேர விரும்புவோா் 9626252500, 9626253300 என்ற கைப்பேசி எண்ணில் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.