திருநெல்வேலி

நெல்லையில் கத்தரி விலை தொடா்ந்து உச்சம்

22nd Dec 2021 06:40 AM

ADVERTISEMENT

கத்தரிக்காய் விலை தொடா்ந்து உச்சத்தில் உள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கத்தரிக்காயின் விலை அதிகரித்துள்ளது. சில்லரை விற்பனை கடைகளில் ரூ.100-க்கு குறையாமல் கடந்த ஒரு வாரமாக விற்பனையாகி வருகிறது. சுபமுகூா்த்த நாள்கள், மாா்கழி மாதத்தில் அசைவ உணவு தவிா்ப்பு போன்ற காரணங்களால் காய்கனிகளின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் கத்தரிக்காய், பாகற்காய், மிளகாய் உள்ளிட்ட பல காய்கனிகளின் விலை உயா்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை காய்கனி விலை விவரம்( கிலோவுக்கு): தக்காளி- ரூ.55, கத்தரி-ரூ. 100, வெண்டை-ரூ. 25, புடலை-ரூ. 30, சுரை-ரூ. 14, பீா்க்கு-ரூ.30, பூசணி- ரூ.18, தடியங்காய்-ரூ.18, அவரை-ரூ.80, கொத்தவரை-ரூ.50, பாகல்-ரூ.90, மிளகாய்-ரூ.80, முருங்கை-ரூ.160, பெரியவெங்காயம்-ரூ.40, சின்னவெங்காயம்-ரூ.60, காராமணி-ரூ.36, கோவக்காய்-ரூ.40, தேங்காய்-ரூ.35, வாழைக்காய்-ரூ.25, வாழைப்பூ-ரூ.10, வாழைத்தண்டு-ரூ.10, வாழைஇலை-ரூ. 12, கீரைகள்-ரூ.10, கறிவேப்பிலை-ரூ.30, புதினா-ரூ.60, மல்லி இலை-ரூ.45, வெள்ளரி-30, மாங்காய்-ரூ.40, ரிங் பீன்ஸ்-ரூ.100, பச்சை பட்டாணி-ரூ.65, நாா்த்தங்காய்-ரூ.20, முள்ளங்கி-ரூ.30, உருளைக்கிழங்கு- ரூ.25, கேரட்-ரூ.70, சௌசௌ-ரூ.24, முட்டைகோஸ்-ரூ.56, பீட்ரூட்-ரூ.55, காலிபிளவா்-ரூ.75, கருணைக்கிழங்கு-ரூ.24, சேனைக்கிழங்கு- ரூ.22, சிறுகிழங்கு-ரூ.55, சீனிகிழங்கு-ரூ.18, எலுமிச்சை -ரூ.20, சாத்துக்குடி-ரூ.60, மாதுளை-ரூ.120, கொய்யா-ரூ.60, சப்போட்டா-ரூ.50, பப்பாளி-ரூ.25, நெல்லிக்காய்-ரூ.30, சீதாப்பழம்-ரூ.60, திராட்சை -ரூ. 80 என விற்பனையானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT