வள்ளியூா் டி.டி.என்.குழுமத்தின் ஹெடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் அறிவியல் விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
சென்டா் ஃபாா் சோஷியல் டெவலெப்மென்ட் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி தலைவா் டி.டி.என்.லாரன்ஸ் தலைமை வகித்தாா். மாணவா்- மாணவிகளிடையே உள்ள தாழ்வு மனப்பான்மை மற்றும் மூடநம்பிக்கையை ஒழிக்கும்விதமாக பொம்மலாட்டம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். கல்லூரி முதல்வா் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் மாணவா், மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.
ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா் முகமது இஃபாம், இளம் செஞ்சிலுவை சங்க அலுவலா் ராம்கி மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.