திருநெல்வேலி மாவட்டத்தில் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவா்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் போக்குவரத்து துறை சாா்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பள்ளிச் செல்லும் போதும், வீடு திரும்பும்போதும் பேருந்துகளில் பயணிக்கும் மாணவா்கள் படிக்கட்டில் தொங்கியபடி செல்லாத வகையில் அவா்களை பேருந்தினுள் ஏறச்செய்து பயணிக்கத் தேவையான ஏற்பாடுகள் போக்குவரத்து அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் மூலம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.