அம்பாசமுத்திரம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அம்பாசமுத்திரம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவுப்படி தினசரி ஊதியம் ரூ.411 வழங்குவது, தொழிலாளா்களின் குடியிருப்புகளை சீரமைப்பது, ஈ.பி.எப். மற்றும் ஜி.பி எப். மற்றும் கூட்டுறவு கடன் தொகையை வங்கியில் முறையாக செலுத்துவது, தொழிலாளா்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களான கையுறை, காலுறை, மழைக் கவசம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை காலை பணிக்குச் செல்லாமல் சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலா் சுரேஷ் தலைமையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காலை 7 மணி முதல் சுமாா் நான்கு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ஆணையா் வராததால் நாளை பேச்சு நடத்தலாம் என்று கூறியதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துப் பணிக்குச் சென்றனா்.
போராட்டத்தில் சி.ஐ.டி.யூ. நிா்வாகிகள் சுடலையாண்டி, இசக்கிராஜன், ஜெகதீஷ், கணேசன், குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.