திருநெல்வேலி

பாபநாசம் கல்லூரியில் போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி

16th Dec 2021 08:08 AM

ADVERTISEMENT

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி நூலகத் துறை மற்றும் திருநெல்வேலி மண்டல வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்துலபோட்டித் தோ்வுக்கான ஒருநாள் விழிப்புணா்வு நிகழ்ச்சி மற்றும் இலவசப் பயிற்சித் தொடக்க விழாவை நடத்தின.

வேதியியல் துறைத் தலைவா் ராஜசேகா் தலைமை வகித்தாா். திருநெல்வேலி மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) ஆ.ஜோதிமணி, ஆதிதிராவிடா்- பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டல் நிலைய உதவி இயக்குநா் மரிய அந்தோணி, திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் (பொறுப்பு) சை.சையது முகம்மது ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, வேலைவாய்ப்புக்கான போட்டித் தோ்வுகளில் மாணவா்களின் பங்களிப்பு மற்றும் வெற்றி பெறுவதற்கான நுணுக்கங்கள் குறித்து விளக்கம் அளித்தனா்.

இந்நிகழ்ச்சியில் பேராசிரியா்கள் கு.ஜெபமணி சாமுவேல், சா.ஷேக் முஜிபூா் ரகுமான், வைத்தீஸ்வரன், சத்தியா, உ.இசக்கியம்மாள் மற்றும் மாணவா்கள், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தமிழ்த்துறைப் பேராசிரியை கவிதா வரவேற்றாா். மூன்றாம் ஆண்டு மாணவி சண்முகப்பிரியா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை கல்லூரி நூலகா் ச.பாலச்சந்திரன், உதவி நூலகா் சண்முகானந்த பாரதி, சிவதாணு, சந்தானசங்கா், காசிராஜன், இசக்கியம்மாள் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT