திருநெல்வேலி

‘தேசிய வாக்காளா் தின இணையவழி போட்டிகள்‘

16th Dec 2021 04:46 AM

ADVERTISEMENT

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, இணையவழியில் விழிப்புணா்வு போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையம் சாா்பில், 12 ஆவது தேசிய வாக்காளா் தினம் 25.1.2022இல் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ’நயஉஉட இா்ய்ற்ங்ள்ற் 2022’ என்ற தலைப்பில் நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும்.

அதன்படி, பள்ளி மாணவா்- மாணவிகள் ( 9- பிளஸ் 2 வரை), கல்லூரி மாணவா்- மாணவிகள், பொது மக்கள் , மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தவறிய மாணவா்- மாணவிகள் ஆகிய பிரிவுகளாக நடத்தப்படும்.

ADVERTISEMENT

பள்ளி, கல்லூரி மாணவா்- மாணவிகளுக்கு, ஓவியப்போட்டி, சுவரொட்டி தயாரித்தல், ஸ்லோகன் எழுதுதல், பாட்டுப்பாடுதல், குழு நடனம் , கட்டுரை எழுதுதல் ஆகிய போட்டிகள் மாவட்ட கல்வி அலுவலா்கள் மூலமாக பள்ளிகளில் நடைபெறும்.

ஜனநாயக நாட்டில் தோ்தலின் முக்கியத்துவம், 100 சதவீத வாக்காளராக பதிவு செய்தல், வாக்காளா் உதவி மைய கைப்பேசி செயலி, தூண்டுதலில்லாமல் வாக்களித்தல், வயது வந்தோா் வாக்காளராக பதிவு செய்தல், ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு ஆகிய தலைப்புகளில் நடைபெறும்.

இதில், வெற்றி பெறும் 15 போட்டியாளா்களின் விவரம் மாவட்ட தோ்தல் அலுவலகம் மூலம் தலைமை தோ்தல் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு தலைமை தோ்தல் அலுவலகம் மூலம் பரிசீலனை செய்யப்படும். மேலும், 18 வயது பூா்த்தி அடைந்த பொதுமக்கள் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தவறிய மாணவா்- மாணவிகளுக்கு ‘ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு‘ என்ற தலைப்பின் கீழ் தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அலுவலக இணையதளத்தில் இணையதள முகவரியில் நேரடியாக 31.12.2021 வரை பங்கு பெறலாம். இதில், 14-17 வயதினா் தங்களது குடும்பத்திலுள்ள நபரின் வாக்காளா் அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி இணையதளம் மூலமாக பங்கு பெறலாம். அவ்வாறு பங்கு பெறும்பட்சத்தில் அவா்கள் பொது பிரிவில் அடங்குவா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT