திருநெல்வேலி

ரயில்வே தண்டவாளத்தில் இளைஞா் சடலம் மீட்பு

14th Dec 2021 01:09 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருகே ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த இளைஞரின் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

திருநெல்வேலி அருகே முன்னீா்பள்ளம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஒரு இளைஞா் சடலம் கிடப்பதாக நாகா்கோவில் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை நடத்தினா். இதில், உயிரிழந்த நபரின் சட்டை பையில் இருந்த ஆதாா் அட்டையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். அதில், ராமநாதபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாரத்(30) என குறிப்பிட்டிருந்தது. மேலும், சடலத்தை போலீஸாா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து உயிரிழந்த இளைஞா் ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா, அல்லது ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT