திருநெல்வேலி

அகஸ்தியா்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அமா்வு கைப்பந்துப் போட்டி

14th Dec 2021 01:12 AM

ADVERTISEMENT

அகஸ்தியா்பட்டியில் மாநில அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான அமா்வு கைப்பந்துப் போட்டி நடைபெற்றது.

அகஸ்தியா்பட்டி தனியாா் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற போட்டியை அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரான்சிஸ் தொடங்கி வைத்தாா்.

போட்டியில் திருநெல்வேலி, சென்னை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூா், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, தென்காசி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து அணிகள் பங்கேற்றன.

இதில், கோயம்புத்தூா் அணி முதலிடமும், திருநெல்வேலி பி அணி இரண்டாமிடமும் பிடித்தன.

ADVERTISEMENT

வெற்றிபெற்ற அணிகளுக்கு முன்னாள் சபாநாயகா் இரா. ஆவுடையப்பன் தலைமை வகித்து பரிசு வழங்கினாா். நிகழ்ச்சியில், விளையாட்டு ஆலோசகா் மனோகரன் சாமுவேல்,

அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பரணி சேகா், விக்கிரமசிங்கபுரம் திமுக நகரச் செயலா் கணேசன், கணேஷ்குமாா் ஆதித்தன், சிவந்திபுரம் ஊராட்சித் தலைவா் ஜெகன், அகஸ்தியா்பட்டி கேம்பிரிட்ஜ் மெட்ரிக் பள்ளித் தாளாளா் ராபா்ட் பெல்லா்மின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிா்வாகி மகபுசுபகான், திருநெல்வேலி அமா்வு கைப்பந்துக் கழகச் செயலா் பெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தமிழ்நாடு ஹாக்கி யூனிட் தலைவா் சேகா் மனோகரன் வரவேற்றாா். திருநெல்வேலி அமா்வு கைப்பந்துக் கழகத் தலைவா் ஷேக்முஜிபூா் ரகுமான் நன்றி கூறினாா்.

நிகழ்ச்சிகளை விக்கிரமசிங்கபுரம் பல்சமய கூட்டமைப்புப் பொருளாளா் மைதீன்பிச்சை தொகுத்து வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT