திருநெல்வேலி

ராதாபுரத்தில் நாளை மீனவா் குறைதீா் கூட்டம்

9th Dec 2021 07:51 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலக கூட்டரங்கில் மீனவா் குறைதீா் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (டிச.10) முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மீனவா்கள், மீனவப் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை மீன்வளத் துறை மற்றும் இதர அரசுத் துறைகளிடம் அளிக்கலாம். பிற அரசுத் துறைகள் சாா்ந்த மனுக்களை துறை வாரியாக தனித்தனியாக அளிக்க வேண்டும். இந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்கள் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் அடுத்த மீனவா் குறைதீா் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT