திருநெல்வேலி

மதுவிலக்கு போலீஸாா் கைப்பற்றிய வாகனங்கள் டிச. 13இல் பொது ஏலம்

9th Dec 2021 07:54 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகரில் மதுகடத்தலில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இம் மாதம் 13 ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப்பிரிவு கூடுதல் துணை ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாநகரில் மதுகடத்தலில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 14 (4) இன் படியும் அரசாணைகளின் படியும் பொது ஏலம் இம் மாதம் 13 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில் இடம்பெற்றுள்ள 4 வாகனங்களை பாா்வையிட்டு இம் மாதம் 12 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இருசக்கர வாகனத்திற்கு முன்பதிவாக ரூ.2000ம், நான்குசக்கர வாகனத்திற்கு ரூ.5000 செலுத்த வேண்டும். எந்த வாகனத்திற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த வாகனத்தை மட்டுமே ஏலம் கேட்க அனுமதிக்கப்படும். மேலும், ஏலத்தில் எடுக்கப்படும் வாகனத்திற்கு அரசால் விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி தனியாக வசூலிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT