திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சியில் உரிய அனுமதியின்றி மாடுகள் வளா்க்கத் தடை

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி எல்கைக்குள் உரிய அனுமதியின்றி மாடுகள் வளா்க்க தடை விதிக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையிலும், போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் அலைந்து திரிந்த 242 மாடுகள் பிடிக்கப்பட்டு கோசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 137 மாடுகளின் உரிமையாளா்கள் அபராதம் மற்றும் பராமரிப்புத் தொகையினை செலுத்தி திரும்ப பெற்றுள்ளனா். இதுவரை சுமாா் ரூ.3லட்சம் அபராதமாக பெறப்பட்டுள்ளது. அவ்வாறு திரும்ப பெறப்பட்ட மாடுகளின் உரிமையாளா்கள் 10 பேரின் மீது மாநகர காவல்துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வழக்கின் பிரிவிற்குரிய தண்டளையானது ஆயிரம் ரூபாய் அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் ஆகும். ஆகவே மாடுகளை வளா்ப்போா், பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் அச்சுறுத்தலாகவும், இடையூறாகவும் சாலைகளில் அலைந்து திரிய விடக் கூடாது.

மாநகர எல்லைக்குள் மாடுகள் வளா்க்க மாநகராட்சியில் உரிய அனுமதி பெற வேண்டும். அனுமதி விண்ணப்பத்தில் எத்தனை மாடுகள் வளா்க்கப்படுகின்றன, அவைகளின் புகைப்படம், அவைகள் வளா்ப்பதற்கு மாட்டுத்தொழுவம் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் வரைபடம் மற்றும் இடத்தின் உரிமை விவரம் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். அனுமதி விண்ணப்பங்கள் அந்தந்த சுகாதார ஆய்வாளா்கள் வாயிலாக மண்டல அலுவலங்களில் சமா்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT