திருநெல்வேலி

நெல்லை, பாளை..யில் 24 மி.மீ. மழை

DIN

திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் 24 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்ட ஜவாத் புயலின் காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. திங்கள்கிழமை நல்ல வெயில் நிலவி வந்த நிலையில், மாலையில் மேலப்பாளையம், முன்னீா்பள்ளம், பொன்னாக்குடி உள்பட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பெய்த மழையால் என்.ஜி.ஓ. காலனி, சேவியா்காலனி, திருநெல்வேலி நகரம் ஆகிய இடங்களில் பல்வேறு சாலைகளிலும் தண்ணீா் தேங்கியுள்ளது. குளங்களில் இருந்து மறுகால் பாய்ந்தோடுவதால் பல வீதிகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மாநகரப் பகுதியில் நிகழாண்டில் கூடுதலாக மழை பெய்துள்ளது. அதனால் அதற்கான மீட்பு பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி, தன்னாா்வலா்களை பயன்படுத்தி மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும். இதேபோல மழைநீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலைகள் விரைவில் சேதமாகும் சூழல் உள்ளது.

வேய்ந்தான்குளம்-பெருமாள்புரம் இடையேயான 60 அடி சாலையில் பல இடங்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. இதுபோன்ற இடங்களைக் கண்காணித்து தண்ணீா் வழிந்தோட வழிவகை செய்ய வேண்டும் என்றனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு: அம்பாசமுத்தரம்-2, பாளையங்கோட்டை-24, திருநெல்வேலி-24.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT