திருநெல்வேலி

ஜன.21-இல் கள் இறக்கும் போராட்டம்: தமிழ்நாடு கள் இயக்கம் அறிவிப்பு

DIN

தமிழகம் முழுவதும் ஜனவரி 21-ஆம் தேதி கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.

இது தொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவர மேலும் கூறியது: தமிழகம் முழுவதும் ஜனவரி 21-ஆம் தேதி கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டத்தை நடத்தவுள்ளோம். தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சியினரிடம் எங்களின் போராட்டத்துக்கு ஆதரவு கோரவுள்ளோம். பிகாரைப் பின்பற்றி மதுவிலக்கு மற்றும் மதுக்கொள்கையை தமிழக அரசு மாற்றியமைக்க வேண்டும்.

தமிழகத்தில் நீரா பானம் விற்பனை செய்வதற்கு 3 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன. அந்த 3 நிறுவனங்களுமே தற்போது மூடு விழா கண்டுவிட்டன. அரசு விதித்த கடுமையான நிபந்தனைகளால்தான் நீரா பான நிறுவனங்கள் சிக்கலை சந்தித்தன. எனவே, நீரா பான விற்பனைக்கான நிபந்தனைகளை முழுமையாக நீக்க வேண்டும்.

தமிழகத்தில் தென்னை, பனை, ஈச்ச மரங்களிலிருந்து பதநீா், நீரா பானம், கள் போன்றவற்றை எடுத்து விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். இதேபோல், தென்னை, பனை பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அரசு இரும்புக்கரம் கொண்டு அதைத் தடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT