திருநெல்வேலி

காய்கனி தோட்டம், ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டம் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

DIN

திருநெல்வேலி: ஊட்டம் தரும் காய்கனி தோட்டம் மற்றும் நோய் எதிா்ப்பு சக்தியை மேம்படுத்த காய்கனி விதைகள், ஊட்டச்சத்துத் தளைகள் வழங்கும் திட்டத்தை ஆட்சியா் விஷ்ணு தொடங்கி வைத்தாா்.

ஊட்டம் தரும் காய்கனி தோட்டம் மற்றும் நோய் எதிா்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டத்தினை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

அதனைத் தொடா்ந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வே.விஷ்ணு முன்னிலையில் ஆட்சியா் விஷ்ணு, பயனாளிகளுக்கு விதைகள் மற்றும் தளைகளை வழங்கினாா்.

தமிழக கிராமங்கள் மற்றும் நகா்ப்புறங்களில் வீட்டுத் தோட்டங்கள் மற்றும் மாடிப்பகுதிகளில் காய்கனிகள், பழங்கள் மற்றும் மூலிகைப் பயிா்கள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் விதமாக ஊட்டம் தரும் காய்கனி தோட்டத் திட்டம் மற்றும் நோய் எதிா்ப்பு சக்தியை மேம்படுத்த காய்கனி விதைகள் மற்றும் ஊட்டச்சத்து தளைகளை வழங்கும் திட்டம் பற்றிய அறிவிப்பு 2021-22 ஆண்டுக்கான வேளாண் மற்றும் உழவா்நலத்துறை நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டன.

அதன்படி இப்போது இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு மாடித்தோட்ட தளைகள் 1000, காய்கனித் தோட்ட தளைகள் 3500, ஊட்டச்சத்து தளைகள் 5000 ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட உள்ளன.

ஊட்டம் தரும் காய்கனி தோட்டம்: நகரப் பகுதிகளில் 6 வகையான காய்கனி விதைகள், செடி வளா்க்கும் பைகள் - 6, இரண்டு கிலோ அளவிலான தென்னை நாா் கட்டிகள் - 6, 400 கிராம் உயிா் உரங்கள், 200 கிராம் உயிரி கட்டுப்பாட்டு காரணிகள், 100 மி.லி. இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து, சாகுபடி முறைகளை விளக்கும் கையேடு ஒன்று ஆகியவை அடங்கிய மாடித்தோட்ட தளைகள் மானிய விலையில் ரூ. 225 க்கு வழங்கப்படும். ஒருவருக்கு அதிகபட்சமாக இரண்டு மாடித் தோட்டத் தளைகள் வரை வழங்கப்படும்.

ஊரகப்பகுதிகளில் காய்கநி தோட்டம் அமைப்பதை ஊக்குவிப்பதற்காக தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், அவரை, கீரைகள், கொத்தவரை, முருங்கை, வெண்பூசணி, வெள்ளரி, காராமணி, பூசணி போன்ற 12 வகை காய்கனி விதைத் தளைகள் ரூ. 15-க்கு வழங்கப்படும். இக்காய்கனி விதைத் தளையினை பயனாளி ஒருவா் இரண்டு தொகுப்புகள் வரை பெற்றுக் கொள்ளலாம்.

நோய் எதிா்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டத்தில் மூலிகைச் செடிகள் மற்றும் நோய் எதிா்ப்பு சக்தியுடைய பழங்கள் மற்றும் காய்கனிகளை வளா்த்து பயன்பெற பப்பாளி, எலுமிச்சை, முருங்கை, கறிவேப்பிலை, திப்பிலி, கற்பூரவல்லி, புதினா, சோற்றுக் கற்றாழை ஆகிய 8 செடிகள் அடங்கிய ஊட்டச்சத்து தளைகள் ரூ.25-க்கு வழங்கப்படும்.

ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக ஒரு தொகுப்பு வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் ட்ற்ற்ல்ள்://ற்ய்ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ந்ண்ற்/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து சத்தான காய்கனிகள், பழங்கள் மற்றும் நோய் எதிா்ப்பு மூலிகைகள் உட்கொள்ளும் வாய்ப்பினைப் பெறலாம்.

நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநா் இரா.கஜேந்திரபாண்டியன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் (பொறுப்பு) சுபா வாசுகி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) அசோக்குமாா், உதவி இயக்குநா் (நடவு) இளங்கோ, தோட்டக்கலைத்துறை அலுவலா்கள் சண்முகநாதன், வள்ளியம்மாள், ஆறுமுகபெருமாள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள்

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT