திருநெல்வேலி

உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம்

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்படுவதால் தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 2,814 வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க ஒரு நபருக்கு ஒரு வாகனத்திற்கு ரூ. 25000 அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைந்ததோ அத்தொகையினை வழங்க ஒப்புதல் அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.”

தமிழ்நாட்டில் வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களுக்கு மாவட்டங்களில் உள்ள பதிவு செய்யப்பட்ட வக்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிதி ஒதுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலருக்கு அளிக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளை தோ்வு செய்ய மாவட்ட ஆட்சியரை தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை உறுப்பினா் செயலா் கூட்டுநராகவும், முன்னோடி வங்கியின் மேலாளரை உறுப்பினராகவும், மாவட்ட வக்பு வாரிய கண்காணிப்பாளரை உறுப்பினராகவும் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் தலைமையிலான தோ்வு குழுவால் தோ்வு செய்யப்படும் பயனாளிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மூலம் மானியத் தொகை மின்னணு பரிமாற்றம் மூலம் வழங்கப்படும்.

வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல், விலைப்புள்ளி ஆகியவற்றுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் வேலை நாள்களில் நேரில் வந்து விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம்.

விளம்பரம் பிரசுரிக்கப்பட்ட நாளிலிருந்து 30 தினங்களுக்குள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை சமா்ப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

SCROLL FOR NEXT