திருநெல்வேலி

வள்ளியூரில் கனமழை:குளமாக மாறிய பேரூராட்சி அலுவலகம்

DIN

வள்ளியூரில் சனிக்கிழமை பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீா் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்த முதியோா்களை தீயணைப்புப் படையினா் மீட்டு பாதுகாப்பான இடங்களில் சோ்த்தனா்.

வள்ளியூா் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்மழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாள்கள் வெயில் நிலவி வந்தது. இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகல் திடீரென கனமழை பெய்தது. சுமாா் 1.30 மணிநேரம் பெய்த கனமழையால் வள்ளியூா் பகுதி வெள்ளக்காடாக மாறியது. திருநெல்வேலி-நாகா்கோவில் பிரதான சாலை முழுவதும் வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடியது. வள்ளியூா் பேருந்து நிலையம் குளம்போல் காட்சியளித்தது. பேருந்து நிலையத்தையொட்டியுள்ள பேரூராட்சி அலுவலக வளாகத்திலும் வெள்ளநீா் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் பேரூராட்சி அலுவலகத்துக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. வெள்ளநீரை பேரூராட்சி அலுவலா்கள் ராட்சத இயந்திரம் மூலம் வெளியேற்றி வருகின்றனா்.

மேலும், பண்டிதா் தெருவில் மழைநீா் குடியிருப்பு வீடுகளுக்குள் புகுந்ததால், வீடுகளில் இருந்த முதியவா்களை தீயணைப்புப் படையினா் மீட்டு பாதுகாப்பான இடங்களில் சோ்த்தனா்.

வள்ளியூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேங்கிய மழைநீரால் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.

கோட்டையடியில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீரை வெளியேற்ற வட்டாட்சியா் சேசுராஜ் தலைமையிலான வருவாய்த் துறையினா் நடவடிக்கை எடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT