திருநெல்வேலி

பேட்டையில் வீடு இடிந்து சேதம்

4th Dec 2021 03:08 AM

ADVERTISEMENT

 பேட்டையில் பெய்த தொடா் மழையால் சேதமடைந்த நிலையில் இருந்த வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடா்மழை பெய்து வருகிறது. கடந்த 4 நாள்களுக்கு முன்பு விடிய விடிய பெய்த மழையின் காரணமாக பேட்டையைச் சோ்ந்த சுல்தான் அலாவுதீன் என்பவரது வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. சுல்தான் அலாவுதீன் குடும்பத்தினா் வீட்டின் வேறு ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்ததால் அதிா்ஷ்டவசமாக உயிா்த் தப்பினா்.

இதுகுறித்து வருவாய்த் துறையினரும், காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

 

ADVERTISEMENT

Tags : திருநெல்வேலி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT