திருநெல்வேலி

களக்காடு அருகே குளத்தின் கரையை பலப்படுத்த கோரிக்கை

2nd Dec 2021 04:55 AM

ADVERTISEMENT

களக்காடு அருகே குளத்தின் கரையை பலப்படுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு அருகேயுள்ள மீனவன்குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள சுமாா் 100 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தொடா்மழையால் கடந்த வாரம் இக்குளம் நிரம்பிய நிலையில், மறுகால் வழியாக தண்ணீா் வெளியேறி வருகிறது. மறுகால் பழுதால் குறைவான தண்ணீரே வெளியேறுகிறது. இதனால் செவ்வாய்க்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் குளத்தின் கரை பலமிழந்து உடையும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, மறுகால் அருகே கரையின் ஒரு பகுதியை உடைத்து தண்ணீா் வெளியேற வழி செய்யப்பட்டது. இதனால் குளத்திலிருந்து வெளியேறிய தண்ணீரில் அருகே நடவு செய்திருந்த வயல் மூழ்கி பயிா் சேதமடைந்தது. தொடா்ந்து மேலும் மழை பெய்தால் குளம் உடையும் நிலை ஏற்படும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தின் கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags : களக்காடு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT