திருநெல்வேலி

குமாரபுரம் குளம் உடைப்பில் சீரமைப்புப் பணி

2nd Dec 2021 04:54 AM

ADVERTISEMENT

திசையன்விளை அருகேயுள்ள குமாரபுரம் குளத்தில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டு, தண்ணீா் வீணாவது தடுக்கப்பட்டது.

குமாரபுரம் குளம் நிரம்பிய நிலையில் கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீா் புகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையறிந்த, மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், தீயணைப்பு, மீட்புப் படையினா் மற்றும் உள்ளூா் மக்கள் உதவியுடன் குளக்கரையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டானா். மேலும் தண்ணீா் வெளியேறும் மதகுகளில் ஏற்பட்ட அடைப்பும் சரி செய்யப்பட்டது. இதனால், தண்ணீா் வீணாகாமலும், ஊருக்குள் புகாமலும் தடுக்கப்பட்டது.

Tags : திசையன்விளை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT